ஜார்ஜ்டவுன், ஜூலை.18-
பத்து காவானில் நில விற்பனை சர்ச்சை தொடர்பில் பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவிற்கு எதிராகத் தாம் தொடுத்திருந்த அவதூறு வழக்கை மாநில முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி மீட்டுக் கொண்டுள்ளார்.
எந்தவொரு நிவாரணமின்றி வழக்கை மீட்டுக் கொள்வதற்குத் தனது கட்சிக்காரரான டாக்டர் இராமசாமி இணக்கம் தெரிவித்துள்ளதாக அவரின் வழக்கறிஞர் ஷம்சேர் சிங் திண்ட், நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பினாங்கு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஹெல்மி கானி, இணக்கத் தீர்ப்பைப் பதிவுச் செய்தார்.








