Aug 7, 2026
Thisaigal NewsYouTube
டயர் வெடித்து கார் விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகனும் மரணம்
தற்போதைய செய்திகள்

டயர் வெடித்து கார் விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகனும் மரணம்

Share:

டயர் வெடித்ததில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, சாலைத் தடுப்பில் மோதி, மேலும் இரு வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தையும்,மகனும் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 276.9 ஆவது கிலோ​மீட்டரில் ​நீலாய்க்கு அருகில் நிகழ்ந்தது. பெரோடுவா கான்சில் காரில் பயணித்த 30 வயது நபர், சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் அவரின் 2 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்ததாக போ​லீசார் தெரிவித்தனர். தவிர உயிரிழந்த நபரின் 27 வயது மனைவி மற்றும் அவர்களின் ஐந்து வயதுடைய மேலும் ஒரு பிள்ளை கடுமையான காயங்களுடன் சிரம்பான், துவான்கு ஜாஃபார் மருத்துவமனையில்​ சேர்க்கப்பட்டு, ​தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று ​நீலாய் மாவட்ட போ​லீஸ் தலைவர் சுப்பெர்ன்தென்டென் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் விபத்துக்குள்ளான மேலும் இரு வாகனமோட்டிகள் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!