கோத்தா பாரு, நவம்பர்.02-
தாய்லாந்து, சுங்கை கோலோக்கில் ஒரு மலேசியப் பிரஜை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகப் பேர்வழிகளில் ஒருவரான கிளந்தான் எஃப்எ முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் 33 வயது மலேசியரான முகமட் ஃபுவாட் ஃபாமி கஸாலி என்பவர் துப்பாக்கித் தோட்டாக்கள் துளைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதன் தொடர்பில் கிளந்தான் மாநிலத்தைப் பிரதிநிதித்து கடந்த 2019 ஆம் ஆண்டு கால்பந்தாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமாட் தெரிவித்தார்.








