ஷா ஆலாம், ஜனவரி.25-
தேர்வு எழுதாமல் இலவசமாக ஓட்டுநர் உரிமம் பெறலாம் எனச் சமூக ஊடகங்களில் பரவி வரும் விளம்பரம் முற்றிலும் பொய்யானது எனச் சிலாங்கூர் சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. இந்த மோசடி விளம்பரத்தில் சிலாங்கூர் ஜேபிஜே இயக்குநர் அஸ்ரின் போர்ஹானின் புகைப்படம் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது பொதுமக்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பொதுமக்கள் இத்தகைய போலியான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், ஓட்டுநர் உரிமம் தொடர்பான தகவல்களைத் துறை சார்ந்த அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் மட்டுமே சரிபார்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜேபிஜே நிர்வாகம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.








