Dec 6, 2025
Thisaigal NewsYouTube
மரம் சாய்ந்ததில் மோட்டர் சைக்கிளோட்டி பலி
தற்போதைய செய்திகள்

மரம் சாய்ந்ததில் மோட்டர் சைக்கிளோட்டி பலி

Share:

மலாக்கா, டிசம்பர்.06-

மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக் கொண்டு சாய்ந்ததில் மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார். அதே வேளையில் கார் ஓட்டுநர் ஒருவர் காயங்களுக்கு ஆளானார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் மலாக்கா, தாமான் செந்தோசா, தெமெங்கோங் போலீஸ் குடியிருப்புக்குப் பகுதிக்கு அருகில் ஜாலான் துன் ரசாக் - ஆயர் குரோ சாலையில் நிகழ்ந்தது.

மரக்கிளைகளுக்கு அடியில் விழுந்து கிடந்த மோட்டார் சைக்கிளோட்டியும், காருக்குள் சிக்கிக் கொண்ட அதன் ஓட்டுநரையும் தீயணைப்பு மீட்புப் படையினரின் உதவியுடன் மரக்கிளைகள் அகற்றப்பட்டு மீட்கப்பட்ட போது, 22 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

19 வயது பெண் காரோட்டி காயங்களுக்கு ஆளானார். அவர் EMRS வாகனத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லரப்பட்டார் என்று மலாக்கா மாநில தீயணைப்பு, மீட்புப் படையின் மலாக்கா மாநில பொது உறவு அதிகாரி Mohd Hafidzatullah Rashid தெரிவித்தார்.

Related News