கோலாலம்பூர், ஜூலை.30-
மலேசியாவின் அடுத்த 5 ஆண்டு கால மேம்பாட்டை முன்னிறுத்தி, 13 ஆவது மலேசியத் திட்டம், நாளை ஜுலை 31 ஆம் தேதி வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
2026 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டை உள்ளடக்கிய இந்த 13 ஆவது மலேசியத் திட்டம் பல்லின மக்களின் ஏற்ற மிகுந்த வாழ்வுக்கு வழி வகுக்கலாம் என்று கூறப்பட்ட போதிலும் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக தேசிய நீரோடையில் அறுப்பட்ட பட்டத்தைப் போல் சமூகவியலிலும், பொருளியலிலும் விடுப்பட்ட ஓர் சமூகமாக விளங்கும் மலேசிய இந்தியர்களுளின் ஏற்ற மிகுந்த வாழ்க்கைக்கு அடித்தளமிடக்கூடிய வலுவானக் கட்டமைப்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஏற்படுத்துவாரா? என்று இந்திய சமூகம் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது








