Sep 25, 2026
Thisaigal NewsYouTube
விமானத்தில் பயணியின் பையில் இருந்து ரிம 60,000 திருட்டு? வெளிநாட்டவரை போலீஸ் வலைவீச்சு
தற்போதைய செய்திகள்

விமானத்தில் பயணியின் பையில் இருந்து ரிம 60,000 திருட்டு? வெளிநாட்டவரை போலீஸ் வலைவீச்சு

Share:

கோலாலம்பூரில் இருந்து பினாங்கு நோக்கிச் சென்ற விமானத்தில் பயணித்த ஒருவரின் பையில் இருந்த 60 ஆயிரம் ரிங்கிட் பணம் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, வெளிநாட்டவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து Balik Pulau மாவட்ட போலீஸ் தலைவர் அனுவால் அப் வஹாப் கூறுகையில், 54 வயது ஆடவர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை தான் வைத்திருந்த பணம் காணாமல் போனது தொடர்பாக போலீசில் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

விமானப் பயணத்தின் போது பையில் வைத்திருந்த பணம், பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்த பின்னர் காணாமல் போனதை அவர் கவனித்ததாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து, அதே விமானத்தில் பயணித்த வெளிநாட்டவர் ஒருவர் பணத்தைத் திருடியிருக்கலாம் என அவர் சந்தேகம் தெரிவித்ததாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, சந்தேக நபரைத் தேடி வருகின்றனர்.

Related News