Mar 20, 2026
Thisaigal NewsYouTube
பகாங்-கிளாந்தான் எல்லையில் 20 கி.மீ தூரத்திற்கு நீண்ட வாகன நெரிசல்
தற்போதைய செய்திகள்

பகாங்-கிளாந்தான் எல்லையில் 20 கி.மீ தூரத்திற்கு நீண்ட வாகன நெரிசல்

Share:

நோன்புப் பெருநாள் விடுமுறையை முன்னிட்டு கிளாந்தான் திரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மேராப்போ மற்றும் கம்போங் மெந்தாரா எல்லைப் பகுதியில் இன்று மாலை நிலவரப்படி சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

கோலாலம்பூர் மற்றும் காஜாங் போன்ற பகுதிகளில் இருந்து கிளாந்தான் நோக்கி வருபவர்கள், குவா முசாங்கை வந்தடையவே சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது ஒருபுறமிருக்க, குவா முசாங் - கோலா லிப்பிஸ் சாலையில் ஆங்காங்கே சில வாகனங்கள் பழுதாகி நின்றதும் இந்த நீண்ட நெரிசலுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

சுமார் 20 லட்சம் வாகனங்கள் இந்த முறை கிளாந்தானுக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுவதால், குவா முசாங் மாவட்டப் போலீசார் போக்குவரத்தைச் சீர்செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ரந்தாவ் மானிஸ் மற்றும் குவா முசாங் - கோலா கிராய் பகுதிகளில் நெரிசல் மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து