சிரம்பான், அக்டோபர்.13-
இவ்வாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நெகிரி செம்பிலான் மாநிலத்துக்கு சுமார் 8 இலட்சம் வாகனங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அம்மாநில காவல்துறை அறிவித்துள்ளது.
இது வழக்கமான நாட்களுடன் ஒப்பிடும் போது சுமார் 73 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலம் பள்ளி விடுமுறையுடன் இணைந்திருப்பதாலேயே இக்கூடுதல் எண்ணிக்கை ஏற்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர் டத்தோ அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
எனவே வரும் அக்டோபர் 17 முதல் 21 வரை, மாநில போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையைச் சேர்ந்த 279 அதிகாரிகள் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ஓப் லஞ்சார் என்ற சிறப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








