Sep 26, 2026
Thisaigal NewsYouTube
தனியார் துறை ஊழியர்களின் குறைந்த ஊதியம் குறித்து அன்வார் அதிருப்தி
தற்போதைய செய்திகள்

தனியார் துறை ஊழியர்களின் குறைந்த ஊதியம் குறித்து அன்வார் அதிருப்தி

Share:

அதிக லாபம் ஈட்டும் சில பெரிய தனியார் நிறுவனங்கள், தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களுக்கு இன்னும் குறைந்த ஊதியம் வழங்கப்படுவது குறித்து தாம் அதிருப்தி அடைந்துள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கு அரசு மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அது தொடர்பான அறிவிப்பை அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்படும் 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வெளியிடப் போவதாகவும் அவர் கூறினார்.

மலேசியாவில் உற்பத்தித்திறன் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், அதற்கேற்ப ஊதியம் உயரவில்லை என்றும், தென் கொரியாவில் உற்பத்தித்திறன் உயர்வுடன் ஊதியமும் அதிகரித்துள்ளதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.

மேலும், ஊழியர்களின் ஊதியத்தை உற்பத்தித்திறனுக்கு ஏற்ப உயர்த்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related News