பெர்சியாரான் துவான்கு சேய்ட் சிராஜுடின் சாலையில் அமைந்துள்ள மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் பயிற்சி மையத்திற்கு அருகில் நேற்று நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவத்தினால் 76 பேர் உடனடியாக இடம் மாற்றப்பட்டுள்ளனர்.
நேற்று ஒரு மணி அளவில் நடத்த இந்த நிலச்சரிவு சம்பவம் இயற்கை பேரிடரால் ஏற்படவில்லை என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொதுபணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலேக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார். மண் அடியில் இருக்கும் குழாயில் கசிவு ஏற்பட்டதால் இந்த நிலச்சரிவு நிகழ்ந்திருக்க கூடும் என்று அலேக்சாண்டர் நந்தா மேலும் விளக்கினார்.
எனினும், இந்த நிலச் சரிவு சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யும் பொருட்டாக போலீசார் , செந்தூல் போலீஸ் தலைமையகத்தில் மூன்று மணி நேர சந்திப்புக் கூட்டம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேறு மையத்திற்கு மாற்றப்பட்ட 36 ஆண்களையும், 40 பெண்களும் எவ்வித காயமும் இன்றி இச்சம்பவத்தில் உயிர்த் தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.








