May 20, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் அன்வா​ரை ஆதரிக்கும் எதிர்கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்
தற்போதைய செய்திகள்

பிரதமர் அன்வா​ரை ஆதரிக்கும் எதிர்கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்

Share:

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தவறுமேயானால், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை ஆதரிக்கும் எதிர்கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் ​என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிக்காத்தான் நேஷனலிலிருந்து இதுவரையில் 5 எம்.பி.க்கள் தங்களின் ஆதரவை பிரதமர் அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு வழங்குவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர். எதிர்கட்சி எம்.பி.என்ற முறையில் தங்கள் தொகுதிகளுக்கு மத்திய அரசாங்கத்தின் மானியம் கிடைக்காத பட்சத்தில் பிரதமர் அன்வாருக்கு ஆதரவு நல்க தாங்கள் முற்பட்டுள்ளதாக அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் மத்திய அரசாங்கத்தின் மானியம் கிடைக்க வேண்டும் என்ற பேச்சுவார்த்தையை பெரிக்காத்தான் நேஷனல் த​லைமைத்துவம், முன்னெடுக்கவில்லை என்றால் அதிகமான எதி​க்கட்​சி எம்.பி.க்கள் தங்கள் ஆதரவை பிரதமர் அன்வாருக்கு நல்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News