May 22, 2026
Thisaigal NewsYouTube
மூத்தக்குடிமக்கள் இருவர் கருகி மாண்டனர்
தற்போதைய செய்திகள்

மூத்தக்குடிமக்கள் இருவர் கருகி மாண்டனர்

Share:

கூச்சிங், மார்ச் 2 -

வாகனப் பட்டறை தீப்பிடித்துக்கொண்டதில் அந்த பட்டறையுடன் ஒட்டிய வீடு ஒன்றில் வசித்து வந்த ஒரு மூத்த தம்பதியர் தீயின் ஜுவாலையில் சிக்கி மாண்டனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் சரவாக், கூச்சிங், ஜாலான் டத்துக் பன்டாட் முஸ்தாப்பா வில் நிகழ்ந்தது. இதில் ஒரே அறையில் உறங்கி கொண்டு இருந்த 70 வயது முதியவரும், அவரின் 60 வயது துணைவியாரும் கருகி மாண்டனர் என்று தீயணைப்புப்படையினர் அடையாளம் கூறினர்.

வீடு முற்றாக எரிந்து சாம்பலானது என்பதால் அந்த மூத்த குடிமக்களின் கருகிய உடல் அவயங்களை மீட்பதற்கு தீயணைப்புப்படையினர் K9 மோப்ப நாய்களை பயன்படுத்தினர்.

Related News