Sep 27, 2026
Thisaigal NewsYouTube
எரிபொருள் கடத்தலைத் தடுக்க எல்லையோர எரிபொருள் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு
தற்போதைய செய்திகள்

எரிபொருள் கடத்தலைத் தடுக்க எல்லையோர எரிபொருள் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு

Share:

எரிபொருள் கடத்தல் மற்றும் கசிவைத் தடுக்கும் நோக்கில், அதிக ஆபத்துள்ள எரிபொருள் நிலையங்களில் போலீசாரை நிலைநிறுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், உள்நாட்டு விநியோகத்தைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் அமீர்சான் முகமட் அலி தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக 87 எரிபொருள் நிலையங்களில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு, அடுத்த வாரம் முதல் இரண்டாம் கட்டமாக மேலும் 70 நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது.

அமைச்சின் அமலாக்க அதிகாரிகளின் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, போலீசாரின் உதவி கோரப்பட்டுள்ளது. மேலும், எரிபொருள் நிலையங்களைக் கண்காணிக்க ரேலா தன்னார்வலர்களைப் பயன்படுத்துவது குறித்தும் உள்துறை அமைச்சருடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Related News