Jan 18, 2026
Thisaigal NewsYouTube
டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், ரஃபிஸி ரம்லிக்கு வீட்டில் சந்தேகிக்கும் பொட்டலம் பெறப்பட்டது.
தற்போதைய செய்திகள்

டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், ரஃபிஸி ரம்லிக்கு வீட்டில் சந்தேகிக்கும் பொட்டலம் பெறப்பட்டது.

Share:

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் பொருளாதாரா அமைச்சர் ரஃபிஸி ரம்லி ஆகியோரின் வீடுகளுக்கு முகவரியிடப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்ட சந்தேகத்திற்கு இடமான பொருட்களில் அபாயகர போதைப்பொருள் எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை. மாறாக, பற்பசை மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர், டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

இன்று ஷா ஆலாமில், சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய டத்தோ ஹுசேன் ஒமார், அப்பொருட்கள் ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார்.

அந்த இரு பொட்டலங்களையும் ஒரே நபர்தான் அனுப்பியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட ஆடவரை அடையாளம் காணும் நடவடிக்கையைப் போலீசார் துரிதப்படுத்தப்பட்டுயிருப்பதாகவும் ஹுசேன் ஒமார் விளக்கினார்.

கடந்த திங்கட்கிழமை, சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி வான் கமருல் அஸ்ரான் வான் யூசுப் வெளியிட்ட தகவலின்படி இதற்கு முன்பு, புத்ராஜெயா, அரசாங்க நிர்வாக பாதுகாப்பு மையத்திலிருந்து கிடைக்கப்பெற்ற புகாரில் மேற்கண்ட இரு அரசியல்வாதிகளின் பெயர்களுக்கும் பொட்டலங்கள் பெறப்பட்டதாக தெரிவித்து இருந்தார்.

சம்பந்தப்பட்ட தலைவர்களின் அலுலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த பொட்டலங்களில் தடைச் செய்யப்பட்ட கஞ்சா இலைகள் இருந்தது தெரியவந்தது என்று வான் கமருல் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!