Dec 4, 2025
Thisaigal NewsYouTube
இன விவகாரங்களில் அம்னோவை விட பாஸ் கட்சி நிதானமாகவும், தெளிவாகவும் உள்ளது
தற்போதைய செய்திகள்

இன விவகாரங்களில் அம்னோவை விட பாஸ் கட்சி நிதானமாகவும், தெளிவாகவும் உள்ளது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.16-

இன விவகாரங்களில் அம்னோவை விட பாஸ் கட்சி மிக நிதானமாகவும், தெளிவாகவும், விவேகமாகவும் உள்ளது என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸையிட் இப்ராஹிம் தெரிவித்தார்.

இன விவகாரங்களில் எந்தக் கட்சி மிகத் தீவிரமாக உள்ளது என்று மக்கள் நினைத்தார்களோ, அந்தக் கட்சி இன்று மிக நிதானமாக உள்ளது. ஆனால் பாஸ் கட்சியை விட அம்னோ, இன விவகாரங்களில் தீவிரமாக உள்ளது என்று மசீச முன்னாள் உதவித் தலைவர் தி லியான் கேர் முன் வைத்த வாதத்தைத் தாம் தாம் ஏற்றுக் கொள்வதாக முன்னாள் கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினரான ஸையிட் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

அம்னோவுடன் ஒப்பிடுகையில் பாஸ் கட்சி இன விவகாரங்களில் நிதானமாகவும், விவேகமாகவும் இருப்பதைத் தாம் ஒப்புக் கொள்வதாக ஸையிட் இப்ராஹிம் தெரிவித்தார்.

உண்மையிலேயே இன வெறியையும், இனத்துவேஷத்தையும் பாஸ் கட்சி நிராகரிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பாஸ் கட்சி தீவிரவாதம் கொண்டதாகக் கருதப்படுவது, பெரும்பாலும் ஜசெக.வின் பல ஆண்டு கால அரசியலால் முத்திரைக் குத்தப்பட்டதாகும். சீன வாக்காளர்களைத் தங்களுக்கே உரிய விசுவாசமாக வைத்துக் கொள்வதற்கு பாஸ் கட்சியை ஒரு மிரட்டலாக ஜசெக பயன்படுத்தியது என்று ஸையிட் இப்ராஹிம் இன்று தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related News