Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சிகாமட் தொடர் நில நடுக்கம்: விளக்கக் கூட்டத்தில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம்  பங்கேற்பு!
தற்போதைய செய்திகள்

சிகாமட் தொடர் நில நடுக்கம்: விளக்கக் கூட்டத்தில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பங்கேற்பு!

Share:

சிகாமட், செப்டம்பர்.10-

சிகாமட்டில் அண்மையில் ஏற்பட்ட தொடர் நில நடுக்கங்கள் தொடர்பான சமீபத்திய அறிக்கைகள் குறித்த விளக்கக் கூட்டத்தில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று கலந்து கொண்டார்.

இன்று புதன்கிழமை காலை சிகாமட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாமன்னர் கலந்து கொண்டது குறித்து அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஜோகூர் கனிம மற்றும் புவி அறிவியல் துறை இயக்குநர் நூராஸார் ஙாதீமின், ஜோகூர் வானிலை ஆய்வுத் துறை இயக்குநர் நோர் அடாவியா அப்துல்லா மற்றும் சிகாமட் பொதுப்பணித் துறையைச் சேர்ந்த மாவட்டப் பொறியாளர் முகமட் யுஸ்ரி ஸைனால் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு நில நடுக்கம் குறித்து விளக்கமளித்தனர்.

Related News