Oct 16, 2026
Thisaigal NewsYouTube

17 மில்லியன் மலேசியர்களின் மைகாட் தரவுகள் கசிந்துள்ளனவா?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
17 மில்லியன் மலேசியர்களின் மைகாட் தரவுகள் கசிந்துள்ளனவா?

கோலாலம்பூர், டிச.4-


17 மில்லியன் அல்லது ஒரு கோடியே 70 லட்சம் மலேசியர்களின் மைகாட் தரவுகள் கசிந்துள்ளதாகவும், அவை கள்ளச்சந்தை அகப்பக்கத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

X கணக்கில், Fusion Inteligence Center @ StealthMole என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் இப்படியொரு குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

அந்த அகப்பக்கத்தில் மைகாட் அட்டைகளின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நிதி மோசடி இடர்கள் போன்ற ஏமாற்று வேலைகளுக்கு மலேசியர்களின் தரவுகள் பயன்படுத்தப்படக்கூடும் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது.

எனினும் X கணக்கில் வெளியான இந்த செய்தியின் நம்பகத்தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடியே 30 லட்சம் மலேசியர்களின் தரவுகள், தேர்தல் ஆணையம், அஸ்ட்ரோ மற்றும் மே பேங்க் மூலமாக கள்ளச்சந்தை அகப்பக்கத்தில் கசித்துள்ளதாக இதேபோன்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →