சாலை விதிமுறைகளை மீறி எதிர்திசையில் வந்த சொகுசு காரினால் மோதப்பட்ட வாகனமோட்டி ஒருவர், கடும் காயங்களுக்கு ஆளாகினார். இச்சம்பவம் நேற்று பின்னிரவு 12.30 மணியளவில் ஜார்ஜ் டவுன், துன் டாக்டர் லிம் சொங் உ நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது.
பினாங்கு பாலத்திலிருந்து மாநகரை நோக்கி காரில் சென்ற வாகனமோட்டியை எதிர்திசையில் BMW காரில் வந்த மாது மோதியதாக தீமூர் லாவோட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சொஃபியான் சந்தோங் தெரிவித்தார்.
இதில் கடும் காயங்களுக்கு ஆளான பெரோடுவா பேஸா வாகனமோட்டி, பினாங்கு மருத்துமனையில் அவரசப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக சொஃபியான் சந்தோங் குறிப்பிட்டார்.








