கோலாலம்பூர், ஜனவரி.09-
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை நிர்வகிக்கும் பிளஸ் (PLUS) நிறுவனம், டோல் சாவடிகளில் நெரிசலைக் குறைக்கவும், பயணத்தை விரைவுபடுத்தவும் வடக்கு நோக்கிச் செல்லும் 9 முக்கிய நெடுஞ்சாலை மையங்களில் தானியங்கி வாகன எண் பதிவு அங்கீகார முறையை இன்று ஜனவரி 9 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் தொழில்நுட்ப டோல் சாவடிகளில் உள்ள கேமராக்கள் மூலம் வாகனத்தின் பதிவு எண் பலகையைத் தானாகவே கண்டறியும். இதனால் வாகனங்கள் டோல் சாவடியைக் கடக்கும் நேரம் கணிசமாகக் குறையும் என்று பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது RFID மற்றும் SmartTAG-உடன் ஒருங்கிணைப்பட்டதாகும். இந்த ANPR முறை ஏற்கனவே உள்ள RFID மற்றும் பிற கட்டண முறைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுச் செயல்படும். இது கட்டண வசூலில் ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்க்க உதவும்.
வாகன எண்களைத் துல்லியமாகப் பதிவு செய்வதன் மூலம், நெடுஞ்சாலையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் அல்லது விதிகளை மீறும் வாகனங்களைக் கண்டறிவது எளிதாகும்.
முதற்கட்டமாக வடக்கு நோக்கியுள்ள 9 குறிப்பிட்ட நெடுஞ்சாலை நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் இந்த வசதி செயல்படுத்தப்பட உள்ளது பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.








