Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பாலியல் வழக்கில் ஆடவர் தேடப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

பாலியல் வழக்கில் ஆடவர் தேடப்படுகிறார்

Share:

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள ஆடவர் ஒருவர், தனக்கு எதிரான நீதிமன்ற விசாரணையில் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து அந்த நபர் தீவிரமாக தேடப்பட்டு வருவதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி. ஏ ஏ அன்பழகன் தெரிவித்தார்.

அந்த நபர் கடந்த ஜுன் 15 ஆம் தேதியிலிருந்து நீதிமன்ற விசாரணையில் ஆஜராகவில்லை என்று அவர் குறிப்பிட்டார். பூச்சோங், பண்டார் பூச்சோங் ஜெயாவை சேர்ந்த 31 வயதுடைய முகமது மஸ்லான் ஷர்புதீன் என்ற ஆடவர் தற்போது தீவிரமாக தேடப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News