மலாக்கா, நவம்பர்.09-
மலேசியாவிலேயே நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள இரண்டாவது மாநிலமாக மலாக்கா அதிர்ச்சி தரும் வகையில் உருவெடுத்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் குறைந்தது 4,000 புதிய நோயாளிகள் பதிவாகின்றனர். நடப்பு ஆண்டில் இதுவரை 123 ஆயிரத்து 468 நீரிழிவு நோயாளிகள் பதிவாகி இருப்பதாக அறிவித்தார். மேலும் இந்த எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் சுமார் 4,000 என்ற விகிதத்தில் உயர்ந்து வருகிறது என மலாக்கா மாநில சுகாதாரம், மனிதவளம், ஒருமைப்பாட்டுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் Datuk Ngwe Hee Sem குறிப்பிட்டார்.
குறிப்பாக, 18 முதல் 26 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பலர் தாங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை உணராமலேயே உள்ளனர். ஏனெனில், பொதுமக்களின் சுகாதாரப் பரிசோதனை விழிப்புணர்வு இன்னும் மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, பொதுமக்கள் சர்க்கரை உட்கொள்வதைக் குறைப்பது, வாரத்திற்கு 150 நிமிட உடற்பயிற்சி செய்வது, அருகிலுள்ள சுகாதார நிலையங்களில் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்வது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.








