Feb 10, 2026
Thisaigal NewsYouTube
பங்கு விவகாரம்: 800,000 ரிங்கிட் மதிப்பிலான பங்குகளை முறைப்படி அறிவித்து விற்று விட்டதாக அஸாம் பாக்கி விளக்கம்
தற்போதைய செய்திகள்

பங்கு விவகாரம்: 800,000 ரிங்கிட் மதிப்பிலான பங்குகளை முறைப்படி அறிவித்து விற்று விட்டதாக அஸாம் பாக்கி விளக்கம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.10-

நிதிச் சேவை நிறுவனம் ஒன்றில் தனக்கு இருந்த 8 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பங்குகள் கடந்த ஆண்டு வாங்கப்பட்டு, அதே ஆண்டிற்குள் விற்கப்பட்டு விட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி விளக்கம் அளித்துள்ளார்.

இந்தப் பங்குகள் முறையாக அறிவிக்கப்பட்டதாகவும், தனது வருமான ஆதாரங்கள் உட்பட அனைத்து விபரங்களையும் மனித வள மேலாண்மை தகவல் அமைப்பு வழியாக பொது சேவைத் துறைக்குத் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தன் மீதான புகார்கள் உள்நோக்கம் கொண்டவை எனக் கூறிய அவர், இது தொடர்பாக அவதூறு வழக்கு தொடரப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, Velocity Capital Bhd. நிறுவனத்தில் அஸாம் பாக்கி பங்குகளை வைத்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. 2024-ஆம் ஆண்டு அரசாங்கச் சுற்றறிக்கையின்படி, அரசு ஊழியர்கள் ஒரு நிறுவனத்தின் செலுத்தப்பட்ட மூலதனத்தில் 5 விழுக்காடு அல்லது ஒரு லட்சம் ரிங்கிட் மதிப்பிற்கு மேல் பங்குகளை வைத்திருக்க அனுமதி இல்லை. எனினும், தனது பங்கு வர்த்தகம் முற்றிலும் வெளிப்படையானது என்றும், தற்போது அந்தப் பங்குகள் தன்னிடம் இல்லை என்றும் அஸாம் பாக்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Related News