Sep 27, 2026
Thisaigal NewsYouTube
நாசா விமான ஆராய்ச்சியில் மலேசியர் சாதனை
தற்போதைய செய்திகள்

நாசா விமான ஆராய்ச்சியில் மலேசியர் சாதனை

Share:

எதிர்கால விமான தொழில்நுட்ப ஆராய்ச்சியில் நாசா மற்றும் முன்னணி பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்றி மலேசியர் ஒருவர் சாதனை படைத்து வருகின்றார்.

33 வயதுடைய டாக்டர் ராஜா அகிஃப் ராஜா ஜாஹிருதின், தற்போது ஜார்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, டேனியல் ககன்கைம் விண்வெளிப் பொறியியல் பள்ளியில், ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.

மேலும், அமெரிக்காவின் நாசா முன்னெடுத்து வரும் ரேவன்-ஜிடி விண்வெளித் திட்டத்தில் நேரடியாகவும் ஈடுபட்டுள்ளார்.

இத்திட்டமானது, மின்சார சக்தியால் இயங்கும் செங்குத்து புறப்பாடு மற்றும் தரையிறக்கம் (eVTOL) செய்யக்கூடிய வகையில், எதிர்கால விமான தொழில்நுட்பங்களை ஆராய்ந்து வருகின்றது.

இத்தகைய விமானங்கள் பாரம்பரிய விமானங்களைப் போல செயல்படுவதுடன், ஹெலிகாப்டர்களைப் போல செங்குத்தாக பறக்கவும் தரையிறங்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்