கிளந்தான், திரெங்கானு, பகாங், ஜோகூர் மற்றும் சபாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை இன்று வியாழக்கிழமை சற்று குறையத் தொடங்கியுள்ளது.
துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 032 பேராக இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை இன்று மதியம் 26 ஆயிரத்து 914 பேராக குறையத் தொடங்கியுள்ளது என்று நட்மா எனப்படும் தேசிய பேரிடர் நிர்வாக மன்றம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் வழங்கும் வகையில் திறக்கப்பட்ட 137 துயர்துடைப்பு மையங்களின் எண்ணிக்கை 131 ஆக குறைந்துள்ளது என்று நட்மா குறிப்பிட்டுள்ளது.








