Mar 23, 2026
Thisaigal NewsYouTube
முதலீட்டுத் திட்டத்தில் மிகப்பெரிய மோசடி. சிறப்பு விசாரணைக்குழுவை அமைப்பீர்
தற்போதைய செய்திகள்

முதலீட்டுத் திட்டத்தில் மிகப்பெரிய மோசடி. சிறப்பு விசாரணைக்குழுவை அமைப்பீர்

Share:

கோலாலம்பூர், ஜூன் 21-

பினாங்கு, பாயான் லெப்பாஸ்- ஸை தளமாக கொண்டு, கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த மின்சாரப் பொருட்கள் விற்பனை நிறுவனமான Syarikat SSI Universal Sdn. Bhd. நிறுவனத்தின் முதன்மை திட்டங்களில் முதலீடு செய்த நூற்றுக்கணக்கானோர் ஏமாற்றப்பட்டு, மோசடி செய்யப்பட்டது தொடர்பில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தல் இன்று மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது.

கெடா முதல் கிளந்தான் வரையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட மலேசியர்கள், பினாங்கை தளமாக கொண்ட Syarikat SSI Universal Sdn. Bhd. நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் ஆவார்.

இவர்களில் 80 விழுக்காட்டினர் இந்தியர்கள் ஆவர். இவர்கள் கிட்டத்தட்ட 60 லட்சம் வெள்ளி வரையில் முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Syarikat SSI Universal Sdn. Bhd. நிறுவனத்தின் இயக்குநர் ஜோசப் ஹோன் என்பவரின் ஆசை வார்த்தைகள் மற்றும் தங்கள் கண்முன் காட்டப்பட்ட திட்டங்களை நம்பி முதலீடு செய்த பெருவாரியான இந்தியர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக மலேசிய தமிழர் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் ஸ்ரீ ரமேஷ் கண்ணன் தெரிவித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முதலீட்டுத் திட்டத்தில் நாடு தழுவிய நிலையில் இந்தியர்கள் குறைந்த பட்சம் 470 வெள்ளி முதல் மூன்று லட்சம் வெள்ளி வரையில் முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில் தாங்கள், யாரை நம்பி முதலீடு செய்தார்களோ அந்த நிறுவனத்தின் இயக்குநரான ஜோசப் ஹோன், கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி இறந்து விட்டதாக கூறி , அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் முடுக்கப்பட்டது, அதில் முதலீடு செய்தவர்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

ஜோசப் ஹோன் முகத்தையும், உடலையும், காட்டாமலேயே அவர் இறந்து விட்டதாக கூறி, பாயான் லெப்பாஸ்-ஸில் நடைபெற்ற இறுதி சடங்கு, பல்வேறு சந்தேகங்களுங்கு இடமான உள்ளன.

ஜோசப் ஹோன் இறப்பு குறித்து விசாரணை செய்யவும், முதலீட்டுப் பணம் எங்கே போனது என்பதை ஆராயவும், இழந்து பணத்தை மீட்பதிலும் போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும் என்று ரமேஷ் கண்ணன் கேட்டுக்கொண்டார்.

தங்களின் பணத்திற்கு ஜோசப் ஹோன்- னின் மனைவி உட்பட நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் யாரும் பொறுப்பேற்காதது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என்று பாதிக்கப்பட்டர்களில் ஒருவரான சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த தனசீலன் புருஷோத்மன் தெரிவித்தார்.

குறிப்பாக Syarikat SSI Universal Sdn. Bhd. நிறுவனத்தின் இயக்குநர் ஜோசப் ஹோன்- கடந்த 2019 ஆம் ஆண்டிலேயே தனது பெயரை அகற்றிவிட்டு, தனது கார் ஓட்டுநரை நிறுவனத்தின் இயக்குநரான பதிவு செய்து இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என்று தனசீலன் கூறுகிறார்.

மலேசிய தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீ ரமேஷ் மற்றும் செயலாளர் ஈஸ்வரி சுப்பிரமணியம் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இவ்விவகாரத்தில் விரிவான விசாரணை தேவை என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த முதலீட்டுத் திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 40 பேர் இன்று வழங்கிய மகஜரை, போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் சார்பில் புக்கிட் அமான் தலைமையகத்தின் தொடர்புத்துறை அதிகாரி ஏஎஸ்பி எஸ்.விஸ்வமலர் பெற்றுக்கொண்டார்.

Related News

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்