Jul 2, 2026
Thisaigal NewsYouTube
ஷா ஆலமில் 14 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானர் - சந்தேக நபருக்கு போலீஸ் வலைவீச்சு
தற்போதைய செய்திகள்

ஷா ஆலமில் 14 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானர் - சந்தேக நபருக்கு போலீஸ் வலைவீச்சு

Share:

ஷா ஆலம், செக்‌ஷன் 32 பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், 14 வயது சிறுவன், அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் நேற்று பிற்பகல் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது அச்சிறுவன் புக்கிட் கெமுனிங் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் படுக்கையறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

சந்தேகநபர் சிறுவனிடம் கைப்பேசி இணைய வசதி வழங்குவதாக ஆசை காட்டி, அந்த அடுக்குமாடி வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்ய தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ராம்சே எம்போல் தெரிவித்துள்ளார்.

Related News

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

மாநிலத் தேர்தலில் போட்டியிட சர்ச்சைக்குரிய வர்த்தகர் ஆல்பர்ட் தே விருப்பம்

மாநிலத் தேர்தலில் போட்டியிட சர்ச்சைக்குரிய வர்த்தகர் ஆல்பர்ட் தே விருப்பம்