May 5, 2026
Thisaigal NewsYouTube
சிரம்பானில் மோட்டார் சைக்கிள் கும்பல் சிக்கியது: போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாகக் காவற்படை நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

சிரம்பானில் மோட்டார் சைக்கிள் கும்பல் சிக்கியது: போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாகக் காவற்படை நடவடிக்கை

Share:

சிரம்பான், பிப்ரவரி.01-

சிரம்பானில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அதிக ஒலியெழுப்பும் புகைப்போக்கிகளுடன் அபாயகரமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிய கும்பலை இலக்கு வைத்துப் போக்குவரத்துக் காவற்படை இன்று அதிகாலை ஓபராசி சம்சேங் ஜாலானான் எனும் சிறப்புச் சோதனையை மேற்கொண்டனர். பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் Jalan Persiaran S2 , Jalan Persiaran Senawang 1 ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், சுமார் 53 நபர்களும் 46 வாகனங்களும் விரிவான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

விதிமுறைகளை மீறி புகைப்போக்கிகளை உருமாற்றம் செய்தது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 51 அபராத நோட்டீஸ்கள் வழங்கப்பட்டதோடு, மூன்று மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியதாக 36 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்