ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் தமிழ், சீன தாய்மொழிப்பள்ளிகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் உறுதி அளித்துள்ளார்.
தாய்மொழிப்பள்ளிகள் என்பது ஒவ்வொரு இனத்திற்கும் சொந்தமான பள்ளிகளாகும்.எனவே தாய்மொழிப்பள்ளிகள் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவை என்று புத்ராஜெயா நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பிற்கு ஏற்ப அம்மொழி பள்ளிகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த தரப்பினரின் வழக்கு மனு நிராகரிக்கப்பட்டதே இதற்கு தக்க சான்றாகும் என்பதையும் அந்தோணி லோக் சுட்டிக்காட்டினார்.








