Sep 26, 2026
Thisaigal NewsYouTube
மெட்ரிகுலேஷன் மேல்முறையீடு: மாணவர்களுக்கு உதவ டாப்சி சிறப்புக்குழு அமைப்பு
தற்போதைய செய்திகள்

மெட்ரிகுலேஷன் மேல்முறையீடு: மாணவர்களுக்கு உதவ டாப்சி சிறப்புக்குழு அமைப்பு

Share:

மெட்ரிகுலேஷன் கல்வியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஜசெக இளைஞர் பிரிவான ‘டாப்சி’ சிறப்புக்குழு ஒன்றை அமைத்துள்ளது.

இன்று நடைபெற்ற செய்தியாளர்கள கூட்டத்தில் பேசிய பேசிய அதன் தேசியச் செயலாளர் லிம் சுன் வெங், 10A மற்றும் அதற்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 7A முதல் 9A வரை பெற்ற தகுதியுள்ள மாணவர்களும் வாய்ப்பு பெறுவதை உறுதி செய்ய இக்குழு செயல்படும் என்றார்.

"தற்போதைய சீர்திருத்தம் ஒரு தற்காலிக நடவடிக்கையே. எதிர்காலத்தில் STPM மற்றும் மெட்ரிகுலேஷன் இடையிலான முரண்பாடுகளைக் களைந்து, அனைவருக்கும் சமமான வாய்ப்பளிக்கும் வகையில் 'பொது நுழைவுத் தேர்வு முறையை' அரசாங்கம் கொண்டு வரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்," என அவர் தெரிவித்தார்.

மெட்ரிகுலேஷன் வாய்ப்பு கிடைக்காத தகுதியுள்ள மாணவர்கள், வரும் மே 20-ஆம் தேதிக்குள் குறிப்பிட்ட QR குறியீடு அல்லது மாநில அளவிலான டாப்சி பிரதிநிதிகள் மூலம் மேல்முறையீடு செய்யலாம் என அவர் கேட்டுக்கொண்டார்.

Related News