Oct 5, 2026
Thisaigal NewsYouTube

யோங் பெங் பள்ளி மாணவி மரணம்; தலையில் பலத்த காயமே காரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
யோங் பெங் பள்ளி மாணவி மரணம்; தலையில் பலத்த காயமே காரணம்

ஜோகூர், பத்து பஹாட்டில் யோங் பெங் பள்ளியில் கொலை செய்யப்பட்ட 16 வயது நான்காம் படிவ மாணவி ஐரின் சோஃபியா கைருல் ஃபைசாலின் மரணத்துக்கு, தலையில் மழுங்கிய பொருளால் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட பலத்த காயமே காரணம் என பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் கூறுகையில், நேற்று பத்து பஹாட் சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனையில் தடயவியல் நோயியல் நிபுணர் மேற்கொண்ட பிரேதப் பரிசோதனையின் முடிவில் இது உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை யாரையும் தற்காக்காமல் முழுமையாகவும் வெளிப்படையாகவும் தொழில்முறையுடனும் நடத்தப்படும் என டத்தோ குமார் உறுதி அளித்தார். அதேவேளை, சம்பவத்திற்கான காரணமும் நோக்கமும் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றன என்பதையும் தெளிவுபடுத்தினார்.

இச்சம்பவம் தொடர்பில் 16 வயது மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு, குற்றவியல் சட்டம் 302ஆவது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவும் வகையில் வரும் 9ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →