Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஃபெராரரி கார் களவாடப்பட்ட சம்பபவம் : 6 பேர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஃபெராரரி கார் களவாடப்பட்ட சம்பபவம் : 6 பேர் கைது

ஷா ஆலாம், நவ. 27-


கடந்த நவம்பர் 17 ஆம் தேதி உலு கிள்ளானில் கார் கழுவும் மையத்தில் ஃபெராரரி ஆடம்பர கார் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒரு பெண் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

அம்பாங் ஜெயா போலீஸ் தலைமையகத்தின் குற்றத்தடுப்பு பிரிவினர் வெவ்வேறு இடங்களில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் ஐந்து ஊள்ளூர் ஆடவர்களையும், ஒரு வெளிநாட்டுப் பெண்ணையும் கைது செய்துள்ளனர் என்று டத்தோ ஹுசேன் குறிப்பிட்டார்.

அறுவர் அடங்கிய கும்பலை போலீசார் கைது செய்தது மூலம் களவாடப்பட்ட ஃபெராரரி கார் மட்டுமின்றி, நாஸா சூரியா, இரண்டு பி.எம்.டபிள்யூ, ரக கார்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

23 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த அறுவரில் ஒருவருக்கு ஏற்கனவே குற்றப்பதிவு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →