Oct 1, 2026
Thisaigal NewsYouTube

விமான நிலையத்தின் கட்டுமான விபத்தில் ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விமான நிலையத்தின் கட்டுமான விபத்தில் ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

கோத்தா பாரு, டிசம்பர்.24-

கிளந்தான், பெங்காலான் செப்பாவில் உள்ள சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையத்தின் கட்டுமானத் தளத்தில் இன்று நிகழ்ந்த விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமுற்றார்.

இந்த விபத்து தொடர்பாக தீயணைப்பு, மீட்புப்படையினர் மாலை 4.49 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றதாக பெங்காலான் செப்பா நிலைய செயலாக்க அதிகாரி முகமட் ஷாம்சுடின் இஸ்மாயில் தெரிவித்தார்.

எட்டு கிலோமீட்டர் தூரத்தை 18 நிமிடத்தில் சென்றடைந்த தீயணைப்பு, மீட்புப்படை வீரர்கள், கட்டுமானத்தளத்தில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்ட வலது கால் முறிந்த ஒருவரை மீட்டதுடன் மற்றொருவர் உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

உயிரிழந்த நபர், சிலாங்கூர், பந்திங்கை சேர்ந்த 22 வயது முகமட் மாஸ் இட்ஹாம் முகமட் என்று அடையாளம் கூறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →