கோலாலம்பூர், ஆகஸ்ட்.01-
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் மலேசியப் பொருட்களுக்கு 19 விழுக்காடு வரி விதிப்பதாக அதிபர் டொனல்ட் டிரம்ப் அறிவித்தார்.
இன்று ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து அமெரிக்கா ஏற்கனவே அறிவித்து இருந்த 25 விழுக்காடு வரி அமல்படுத்தப்படவிருக்கும் வேளையில் 6 விழுக்காட்டைக் குறைந்து 19 விழுக்காடு வரி விதிப்பை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை காலையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் தொலைபேசி வழி நடத்திய பேச்சு வார்த்தையின் விளைவாக மலேசியாவிற்கான 25 விழுக்காடு வரி விதிப்பை டிரம்ப் ஒத்தி வைத்தார்.
இந்நிலையில் அவர், மலேசியாவிற்கான புதிய வரி விகிதத்தை இன்று அறிவித்துள்ளார். மலேசியாவிற்கு 19 விழுக்காடு வரியை விதிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.








