Aug 12, 2026
Thisaigal NewsYouTube
குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே குறைவான சம்பளம்
தற்போதைய செய்திகள்

குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே குறைவான சம்பளம்

Share:

கோலாலம்பூர், மே.29-

சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் தங்கள் கல்வித் தகுதிக்குக் குறைவானச் சம்பளம் பெறுவது உண்மை என்று மலேசிய சிறு நடுத்தர வணிகங்களின் சங்கத்தின் தலைவர் சின் சீ சியோங் கூறினார். நாட்டில் நிலவும் வேலை வாய்ப்புச் சந்தையில் உள்ள பொருத்தமின்மையே இதற்குக் காரணம் என்றார்.

முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கான குறிப்பிட்ட வேலை வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், பலர் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டிய பதவிகளில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்கின்றனர். மலேசிய வேலைச் சந்தை இன்னும் முதுகலைப் பட்டம் பெற்ற அதிக பணியாளர்களைக் கோரும் நிலையை எட்டவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில் முதலீட்டை அதிகரிக்கவும், சிறு நடுத்தர நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களுக்கு மாறவும் அரசாங்கத்தை அவர் வலியுறுத்தினார்.

Related News

குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே குறைவான சம்பளம் | Thisaigal News