மலேசியாவிலிருந்து அஸ்திரேலியாவிற்குப் போதை பொருளைக் கடத்தும் முயற்சியை அஸ்திரோலியா போலீஸ் படை முறியடித்துள்ளது. மலேசியாவிலிருந்து 78 கோடியே 95 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள 336 கிலோகிராம் எடைக் கொண்ட ஹெரோயின் போதைப்பொருளை அஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்கு கடந்த மாதம் 13 கொள்கலன்கள் வழி கடத்த முயற்சித்துள்ளனர்.
போதைப்பொருளைக் கடத்த முயற்சி செய்தவர்களின் நடவடிக்கையை ஆஸ்திரேலிய போலீஸ் படையினர் , புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்துடன் பகிர்ந்து கொண்டனர் என்றும் அது குறித்து விரிவான விசாரணையை மலேசியப் போலீஸ் படை மேற்கொண்டு வருவதாகவும் போலீஸ்படைச் செயலாளார் டத்தோ நூர்சியா முஹம்மட் சட்டுடின் தெரிவித்தார்.








