பேரா மாநிலத்தில் 2 லட்சம் வெள்ளிக்கு மேல் மதிப்புள்ள வீடுகளை விற்பனை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மாநில சட்டமன்றக்கூட்டத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் 2, 312 வீடுகள் விற்கப்படாமல் அப்படியே உள்ளதாக பேரா மாநில வீடமைப்பு, ஊராட்சித்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் சன்ட்ரியா எங் சிங் தெரிவித்தார்.
மக்களின் வாங்கும் சக்திக்கு அப்பாற்பட்ட நிலையில் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் அவற்றை விற்பனை செய்வதில் மேம்பாட்டு நிறுவனங்கள் சிரமத்தை நோக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.







