Jun 30, 2026
Thisaigal NewsYouTube
மூன்று மீட்டர் நீள ராஜநாகம்: துணி துவைக்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி
தற்போதைய செய்திகள்

மூன்று மீட்டர் நீள ராஜநாகம்: துணி துவைக்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி

Share:

இன்று காலையில் தனது வீட்டின் வராண்டாவில் துணி காயவைத்துக் கொண்டிருந்த 59 வயது பெண்மணி சைபா குண்டன், மூன்று மீட்டர் நீளமுள்ள ராட்சத ராஜநாகத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

கோலத்திரெங்கானுவில் கம்பங் பாங்கோல் கட்டோங் என்ற கிராமத்தில்

காலை 9:30 மணியளவில் வாழை மரத்தடியில் கிடந்த அந்த மஞ்சள் நிறப் பொருளை முதலில் வாழை மரம் என தவறாக நினைத்த அவர், சந்தேகத்தின் பேரில் அருகில் இருந்த கட்டுமானத் தொழிலாளர்களைச் சோதிக்கச் சொன்னபோதுதான் அது பாம்பு என்பது தெரியவந்தது.

கடந்த 40 ஆண்டுகளில் முதன்முறையாக இவ்வளவு பெரிய விஷப்பாம்பை அந்தப் பெண்மணி சந்தித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மலேசிய பொது தற்காப்புப் படை வீரர்கள், காலை 10:20 மணியளவில் பழைய மரச்சாமான்களுக்குள் மறைந்திருந்த அந்த ராஜநாகத்தை 20 நிமிட போராட்டத்திற்குப் பிறகு பாதுகாப்பாக பிடித்தனர். பிடிபட்ட பாம்பு பின்னர் மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.

Related News