Sep 25, 2026
Thisaigal NewsYouTube
மாயமான மலையேற்ற வீரர்: விமர்சனங்களை நிறுத்தக் கோரிக்கை
தற்போதைய செய்திகள்

மாயமான மலையேற்ற வீரர்: விமர்சனங்களை நிறுத்தக் கோரிக்கை

Share:

பத்து புத்தி மலையில் மாயமாகியுள்ள மலையேற்ற வீரர் ஜஸ்லிந்தா சாலுதினைப் பற்றிய சமூக வலைத்தள விமர்சனங்களை நிறுத்துமாறு அவரது குடும்பத்தினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

10 ஆண்டுகளுக்கும் மேலான மலையேற்ற அனுபவம் கொண்ட 49 வயது ஜஸ்லிந்தா, கடந்த மே 24 முதல் காணாமல் போயுள்ளார். உண்மை நிலவரம் தெரியாமல் இணையத்தில் விமர்சிப்பதைத் தவிர்த்து, அவரை மீட்டெடுப்பதற்கான தேடுதல் முயற்சியில் கவனம் செலுத்துமாறு அவரது மூத்த சகோதரி கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்பொழுது தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைமையில் அவருக்கான தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Related News