ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறார்களை கொலை செய்த குற்றத்திற்காக தொழிலாளர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
தமக்கு எதிரான மரணத் தண்டனையை ரத்து செய்யக்கோரி, ஷாருல் பித்ரி ஜுசோ என்பவர் செய்து கொண்ட விண்ணப்பத்தை தள்ளுபடி செய்வதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி டத்தோ வசீர் அலாம் மைடின் மீரா தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
40 வயதான ஷாருல் பித்ரி ஜுசோ கடந்த 2018 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் பேரா, பகான் டத்தோ, கம்போங் சுங்ஙை ஹாஜி முஹமாட் கிராமத்தை சேர்ந்த 5,3,2 வயதுடைய மூன்று சிறார்களை கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு ஈப்போ உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்


