9 கோடியே 70 லட்சம் வெள்ளி லஞ்ச ஊழல் தொடர்பில் மனித வள அமைச்சர் வி. சிவகுமாரின் அந்தரங்க செயலாளர் மகேஸ்வரி மற்றும் சிறப்பு அதிகாரி சுகுமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டது தொடர்பில், மனித வள அமைச்சரும், பத்து காஜா எம்.பி.யுமான வி. சிவகுமார், விடுப்பில் செல்ல வேண்டும் என்று பெர்சத்து கட்சியின் பெர்செகுது பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
ஓர் அமைச்சரின் மிக நெருக்கமான அதிகாரிகள் கைது செய்யப்பட்டது, அமைச்சரின் நம்பகத்தன்மையைக் கேள்வி எழுப்புவதாக உள்ளது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM, மகேஸ்வரி மற்றும் சுகுமாறானை விசாரணை செய்து, அவர்களுக்கு எதிரான ஆதாராங்களை திரட்டி, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டும் வரையில் அமைச்சர் சிவகுமார், மனித வள அமைச்சர் பணிகளை மேற்கொள்வது முறை அல்ல என்று பெர்சத்து கட்சியின் பெர்செகுது பிரிவு வலியுறுத்தியுள்ளது.
அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பது தொடர்பில் தங்கக்ச் சொந்த நலன் சார்ந்த ஒரு நிறுவனத்தை அமைத்து ஊழல் புரிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் மஇகாவின் பேரா மாநில முன்னாள் புத்ரி அமைப்பின் தலைவியான மகேஸ்வரி மற்றும் சுகுமாறன் ஆகியோர்எஸ்.பி.ஆர்.எம். மினால் கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


