Dec 2, 2025
Thisaigal NewsYouTube
நாட்டின் உண்மைத்தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

நாட்டின் உண்மைத்தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது

Share:

சூலு வாரிசுதாரர்கள் என்று கூறிக்கொள்ளும் கும்பல் ஒன்று இழப்பீடு கோரி தொடுத்திருந்த வழக்கில் மலேசியா வெற்றி பெற்று இருப்பது வாய்மையே வெல்லும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஸம்ரி அப்தில் காடீர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அப்பீல் நீதிமன்றம் மலேசியாவிற்கு சாதகமாக அளித்துள்ள தீர்ப்பானது, சூலு விவகாரத்தில் மலேசியாவிடம் உண்மை இருக்கிறது என்பதை அந்த நீதிமன்றம் உணர்ந்துள்ளதாக டாக்டர் ஸம்ரி சுட்டிக்காட்டினார்.

குறிப்பிட்ட தரப்பினரின் சுய நலனுக்காக மலேசியாவின் இறையாண்மையைக் கேள்வி எழுப்பும் வகையில் இவ்வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் மலேசியா வெற்றி பெற்று இருப்பது நீதிக்கு கிடைத்த வெற்றியாகும் என்று டாக்டர் ஸம்ரி வர்ணித்துள்ளார்.

Related News