May 5, 2026
Thisaigal NewsYouTube
எஸ்பிஆர்எம் அதிகாரிகள் தனது வீட்டைச் சோதனையிடப் போவதாக ரஃபிஸி ரம்லி தகவல்
தற்போதைய செய்திகள்

எஸ்பிஆர்எம் அதிகாரிகள் தனது வீட்டைச் சோதனையிடப் போவதாக ரஃபிஸி ரம்லி தகவல்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.13-

இங்கிலாந்தைச் சேர்ந்த செமிகண்டக்டர் நிறுவனமான ஏஆர்எம் ஹோல்டிங்சுடன் அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்த விவகாரத்தில், தன்னை இணைத்து அறிக்கை ஒன்று வெளியாகியிருப்பதால், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தனது வீட்டைச் சோதனையிடப் போவதாக முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை தொடர்ந்து விமர்சித்து வரும் ரஃபிஸி, இது போன்ற "மிரட்டல் தந்திரங்களால்" தான் கலங்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதில் நான் அனுபவம் வாய்ந்தவர் எனக் குறிப்பிட்டுள்ள ரஃபிஸி, இது போன்ற தந்திரங்கள் முந்தைய ஆட்சியில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அவை எந்த பயனும் அளிக்கவில்லை என்றும் விவரித்துள்ளார்.

Related News

எஸ்பிஆர்எம் அதிகாரிகள் தனது வீட்டைச் சோதனையிடப் போவதாக ரஃ... | Thisaigal News