Oct 10, 2026
Thisaigal NewsYouTube

வங்காளதேச ஆடவருக்கு 7 நாள் தடுப்புக் காவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வங்காளதேச ஆடவருக்கு 7 நாள் தடுப்புக் காவல்

மலாக்கா, ஜூன்.17-

வீட்டின் பிரதான ஹாலில் நின்று கொண்டு இருந்த ஐந்து வயது சிறுமியை மானபங்கம் புரிந்ததாக வங்காளதேச குத்தகைத் தொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மலாக்கா, தாமான் மாலிம் ஜெயாவில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் 40 வயது வங்காளதேசத் தொழிலாளர் இன்று மாஜிஸ்திரேட் என். சிவசங்கரி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அந்த நபரை 7 நாட்கள் தடுத்து வைப்பதற்கான அனுமதியைப் போலீசார் பெற்றனர்.

அந்த ஆடவரின் வக்கிரச் செயலுக்கு ஆளானதாக நம்பப்படும் அந்த சிறுமி அழுது கொண்டே தனது தாயாரிடம் நடந்த சம்பவத்தை விவரித்ததைத் தொடர்ந்து இது குறித்து போலீஸ் புகார் செய்யப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →