Oct 16, 2026
Thisaigal NewsYouTube

போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது

நவ. 17-

முக்கியப் பிரமுகர் ஒருவரின் வாகனத்திற்குத் துணியாகச் சென்ற காவல் துறை வாகனம், பொது மக்கள் வாகனத்துடன் மோதிய சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விபத்து வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 259-வது கிலோமீட்டரில் நேற்று சனிக்கிழமை நடந்தது.

புக்கிட் அமான், போக்குவரத்து விசாரணை, சட்ட அமலாக்கப் பிரிவின் இயக்குநர் Datuk Seri Mohd Yusri Hassan Basri ,இந்த விபத்து குறித்து தெரிவிக்கயில், தமது தரப்புக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

சமூக ஊடகங்களில் இந்த விபத்து குறித்த காணொலி பரவியுள்ளது. அந்தக் காணொலியில் , போலீஸ் வாகனம் ஒன்று வேகமாக சென்று மற்றொரு காரை மோதுவது தெளிவாக இடம்பெற்றிருந்தது. பொதுமக்களிடம் இந்த விபத்து குறித்த தகவல்கள் இருந்தால், போலீசில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →