கோலாலம்பூர், டிசம்பர்.17-
ஆண்டு இறுதி விடுமுறையில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையை நாள் ஒன்றுக்கு சராசாரி 2.2 மில்லியன் வாகனங்கள் பயன்படுத்தக்கூடும் என்று பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
வரும் வெள்ளிக்கிழமையுடன் பள்ளி இறுதித் தவணை விடுமுறை தொடங்குகிறது. டிசம்பர் 19,20, 22.,23, 24,26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு, உச்சக்கட்டமாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பள்ளி விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, வழக்கத்திற்கு மாறாக இருக்கும் என்று பிளஸ் நிறுவனம் கணித்துள்ளதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








