Feb 11, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் துறையின் தோல்விகளைக் கண்டித்து புக்கிட் அமானில் அரசு சாரா இயக்கம் மகஜர்
தற்போதைய செய்திகள்

போலீஸ் துறையின் தோல்விகளைக் கண்டித்து புக்கிட் அமானில் அரசு சாரா இயக்கம் மகஜர்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.11-

போலீஸ் துறையினரின் வன்முறை மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் குறித்து Sekretariat Himpun என்ற பொது உரிமை கூட்டணி இன்று புக்கிட் அமானில் ஒரு மகஜரைச் சமர்ப்பித்தது. அண்மைய நிகழ்வுகள், போலீஸ் துறையின் செயல்பாட்டில் உள்ள முறையான தோல்விகளையேக் காட்டுவதாக அக்கூட்டணி தெரிவித்துள்ளது.

சுவாராம் அமைப்பின் நிர்வாக இயக்குனர் அஸுரா நஸ்ரோன், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் பிரதிநிதி எஸ். விஸ்வமலரிடம் இந்த மனுவை வழங்கினார். இதில் கைது நடவடிக்கைகள், விசாரணைகள், சோதனைகள் மற்றும் பலவந்தங்கள் ஆகியவற்றில் கடுமையான கண்காணிப்பு உள்ளிட்ட அவசர சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவங்களை தனிப்பட்ட நிகழ்வுகளாகப் பார்க்க முடியாது, மாறாக இவை போலீஸ் துறையில் மீண்டும் மீண்டும் நிகழும் முறையான தோல்விகளையே வெளிப்படுத்துகின்றன என்று அஸுரா நஸ்ரோன் அந்த மகஜரில் சுட்டிக் காட்டினார்.

Related News