Oct 18, 2026
Thisaigal NewsYouTube

அரசாங்க சார்பு நிறுவனங்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அரசாங்க சார்பு நிறுவனங்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம்

புத்ராஜெயா,செப்டம்பர் 03-

அரசாங்க சார்பு நிறுவனங்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடி காட்டியுள்ளாரர்.

ஓர் அரசாங்க சார்பு நிறுவனம், கொண்டுள்ள அதே செயல்பாட்டையும், பங்களிப்பையும், மற்றொரு சார்பு நிறுவனம் கொண்டிருப்பது, / அரசு சார்பு நிறுவனங்களில் பணிசார்ந்த மோதல்கள் ஏற்படுவது / மற்றும் கட்டுப்பாடற்ற செலவினங்கள் / முதலிய சிக்கல்களை தீர்ப்பதற்காக அவற்றின் பணித்தன்மையை பகுத்து ஆராய்வதற்கு நிதி அமைச்சின் கீழ் செயலகம் ஒன்று அமைக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த செயலகத்தை உடனடியாக அமைப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

ஓர் அரசாங்க சார்பு நிறுவனம் செய்யக்கூடிய பணியை மற்றொரு சார்பு நிறுவனம் செய்யாமலும், இதன் மூலம் கட்டுப்பாடற்ற நிதி செலவினம் ஏற்படுவதை தடுக்கவும் அவற்றை கண்காணிக்கும் ஓர் ஒருங்கிணைந்த மையமாக அந்த செயலகம் விளங்கும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

தற்போது அதிகமான அரசாங்க சார்பு நிறுவனங்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், அவற்றின் எண்ணிக்கை குறைக்கப்படுவதற்கான சாத்தியத்தையும் மேற்கோள்காட்டினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →