கிளந்தான் மாநிலத்தில் வெள்ளம் ஏற்படத் தொடங்கியுள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முதல் இடமாகப் பாசீர் பூத்தே விளங்குகிறது. இங்கு இன்று காலை இரு துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டன.
Dalam Rhu.தேசியப் பள்ளி, வாக்காஃப் ராஜா தேசியப் பள்ளி ஆகிடவற்றறில் அமைக்கப்பட்டுள்ள துயர் துடைப்பு மையங்களில் 71 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் மையம் கூறியது.
Dalam Rhu துயர் துடைப்பு மையத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேரும் வாக்காஃப் ராஜா துயர் துடைப்பு மையத்தில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 29 பேரும் தஞ்சம் புகுந்துள்ளனர்..







