Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கிளந்தானின் அவசர நிலை அறிவிக்கப்படாது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கிளந்தானின் அவசர நிலை அறிவிக்கப்படாது

கோத்தாபாரு, நவ. 28-


கிளந்தான் மாநிலத்தில் வெள்ள நிலைமை மோசமடைந்து வந்த போதிலும் அம்மாநிலத்தில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்படாது என்று மாநில அரசின் துணை செயலாளர் அப்துல் ஃபத்தா ஹஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

தற்போது வெள்ள நிலைமை முழு கட்டப்பாட்டில் இருப்பதால் அவசர நிலையை அறிவிப்பதற்கு தற்போது அவசியமில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

கிளந்தானில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாண மையங்களில் தஞ்சம் புகுவதற்கு ஏதுவாக இதுவரை 157 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 17 மின்சார துணை நிலையங்களின் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →